< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியப்பிரதேசம்: இரண்டு சாலை விபத்துகளில் 7 பேர் பலி
|3 Aug 2022 3:02 PM IST
மத்தியப் பிரதேசத்தில் நேற்று நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர்.
தார்,
மத்தியப் பிரதேசம் மாநிலம் தார் மற்றும் சத்னா மாவட்டங்களில் நேற்று நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர்.
பாக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தார் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ள டெஹ்ரி கிராமத்திற்கு அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் சத்னா மாவட்டத்தில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள கைர்ஹானி கிராமத்திற்கு அருகே நேற்று மதியம் ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
மேலும், அதே வாகனத்தில் பயணித்த 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மூன்று பேர் மேற்சிகிச்சைக்காக ரேவாவுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.