< Back
தேசிய செய்திகள்
நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே  விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி: மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்...!
தேசிய செய்திகள்

நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி: மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்...!

தினத்தந்தி
|
17 Aug 2023 7:36 PM IST

நன்னடத்தை காரணமாகச் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையான பாலியல் குற்றவாளி மீண்டும் ஒரு சிறுமியைப் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தூர்,

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பலாத்கார வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர் மீண்டும் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுவும் 5 வயது சிறுமியை அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார். அந்த கொடூரன் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மனித மிருகமான ராகேஷ் வர்மா, மிட்டாய் வாங்கி தருவதாகச் கூறி அந்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியைக் காப்பாற்ற வந்த பாட்டி இவனைப் பிடிக்க முயன்றுள்ளார். இருப்பினும், அவன் ஓடிச் சென்று அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் சுமார் 2 மணி நேரம் தேடிய பின்னரே பாதிக்கப்பட்ட அந்த சிறுமியைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சிறுமி ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரனுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்