< Back
தேசிய செய்திகள்
எம்.பி. பதவி நீக்கத்திற்கு தடை கோரி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு; கர்நாடக ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தேசிய செய்திகள்

எம்.பி. பதவி நீக்கத்திற்கு தடை கோரி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு; கர்நாடக ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

தினத்தந்தி
|
6 Sept 2023 12:15 AM IST

எம்.பி. பதவி தகுதி நீக்க தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.

பெங்களூரு:

நாடாளுமன்றத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் ஹாசன் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் இருந்த ஒரேயொரு எம்.பி. இவர் தான்.

இந்த நிலையில் அவர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறி அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட ஏ.மஞ்சு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தேவராஜ்கவுடா என்ற வக்கீலும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக ஐகோர் ட்டு நீதிபதி நடராஜன், பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து சமீபத்தில் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோா்ட்டில் மேல்முறையீடு செய்ய பிரஜ்வல் ரேவண்ணா முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா சார்பில் அவரது வக்கீல் உதய் ஹொல்லா கர்நாடக ஐகோர்ட்டி நேற்று ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் பிரஜ்வல் ரேவண்ணா தனது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்துள்ள தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கேரியுள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உளளது.

மேலும் செய்திகள்