< Back
தேசிய செய்திகள்
ம.பி.: 3 ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய கணித ஆசிரியர் சஸ்பெண்ட்
தேசிய செய்திகள்

ம.பி.: 3 ஆம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய கணித ஆசிரியர் சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
31 July 2022 7:58 PM IST

மூன்றாம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியப்பிரதேசத்தில் மூன்றாம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மாமத்கெடா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், ஜினேந்திர மோக்ரா என்பவர் கணிதம் நடத்தும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறர்.

இந்த நிலையில், கணக்கு பாடம் சரியாக வராத ஒன்பது வயது மாணவியை ஜினேந்திர மோக்ரா கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் சிலர் வெளியிட்டது, அப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்