< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் 21 துப்பாக்கிகளுடன் ஆயுத வியாபாரி கைது
|13 Aug 2023 1:36 AM IST
டெல்லியில் சட்டவிரோத ஆயுதங்களை சப்ளை செய்யும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் சுதந்திர தினவிழாவையொட்டி பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு நடத்தி அசாம்பாவிதம் நடக்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். இந்தநிலையில் சட்டவிரோத ஆயுதங்களை சப்ளை செய்யும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தியபிரதேசத்தை சேர்ந்த அவரை டெல்லியில் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து நவீன ரகத்தை சேர்ந்த 21 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றப்பட்டன.