< Back
தேசிய செய்திகள்
ம.பி.:  ஓட்டலில் இரவில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்
தேசிய செய்திகள்

ம.பி.: ஓட்டலில் இரவில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்

தினத்தந்தி
|
15 Sept 2024 1:52 AM IST

மத்திய பிரதேசத்தில் ஓட்டலுக்கு வரவழைத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர், அசாமில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் நபருக்கு எதிராக பாலியல் பலாத்கார புகாரை அளித்திருக்கிறார்.

அந்த புகாரின்படி, இந்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு வரும்படி அந்த வீரர் பெண்ணிடம் கூறியுள்ளார். இதன்படி, கடந்த வெள்ளி கிழமையன்று இரவில் அந்த பெண் சென்றிருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை ராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கண்ணாடி ஒன்றையும் திணித்துள்ளார். இதனால், காயமடைந்த அந்த பெண் ரத்தம் வழிய மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அந்த வீரர் மறுத்துள்ளார். வங்கி ஊழியரின் மனைவியான அந்த பெண்ணின் ஒப்புதலுடனேயே பாலியல் உறவு நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், தகாத உறவு பற்றிய ஆட்சேபனைக்குரிய வீடியோ ஒன்றை எடுத்து வைத்து கொண்டு அந்த பெண்ணை, வீரர் மிரட்டியுள்ளார் என அந்த பெண் குற்றச்சாட்டாக கூறியிருக்கிறார். இந்த சம்பவம் பற்றி இந்தூர் மகிளா தானா காவல் நிலைய அதிகாரி கவுசல்யா சவுகான் கூறும்போது, அந்த ராணுவ வீரர் உத்தர பிரதேசம் கிழக்கு பகுதியில் இருந்து வந்தவர்.

அசாமில் வீரராக பணியமர்த்தப்பட்டு உள்ளார். பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. புகாரை தொடர்ந்து, உயர்ரக ஓட்டலுக்கு சென்ற போலீசார் வீரரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்