< Back
தேசிய செய்திகள்
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
தேசிய செய்திகள்

குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

ராபர்ட்சன்பேட்டையில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோலார் தங்கவயல்

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை சுராஜ்மெல் சர்க்கிளில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வங்கிக்கு எதிரே உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தற்போது மழை பெய்து வருவதால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இதனால் சாலை பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.

குண்டும், குழியுமான சாலையை சரி செய்யும்படி அந்தப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் சாலை பள்ளத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. சுராஜ்மெல் சர்க்கிள் மட்டுமின்றி காந்தி சர்க்கிள் வரை சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

இதனால், தங்கவயலில் குண்டும், குழியுமாக உள்ள மற்றும் சேதமடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்