மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்; கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி
|மோட்டார் சைக்கிள் - லாரி மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.
பெங்களூரு: பெங்களூரு எச்.ஏ.எல். 2-வது ஸ்டேஜ் பகுதியில் வசித்து வந்தவர் மணீஷ் மகேஷ் வீரப்பா(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் ஹெப்பால் பகுதியில் உள்ள ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலையில் இவர் தனது வீட்டில் இருந்து வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அவர் பெங்களூரு ராமமூர்த்தி நகர் வழியாக பானசாவடி வெளிப்புற சுற்றுவட்டச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அவர் உரமாவு அருகே சுரங்கப்பாதை சாலை வழியாக சென்றபோது அவருக்கு பின்னால் வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மணீசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணீஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார். இதுபற்றி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.