< Back
தேசிய செய்திகள்
மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்; கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு
தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்; கம்ப்யூட்டர் என்ஜினீயர் சாவு

தினத்தந்தி
|
14 Sept 2022 8:35 PM IST

சூரத்கல் அருகே மோட்டார் சைக்கிள் - லாரி மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உயிரிழந்தார்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் சூரத்கல்லை அடுத்த பக்சிகெரே ஹொசகாடு பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் ஷெட்டி(வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை இவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஹலேயங்கடி சந்திப்பில் அவர் சென்றபோது அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த லாரி மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் ஷெட்டி பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மங்களூரு வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்