< Back
தேசிய செய்திகள்
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஊழியர் குத்திக் கொலை
தேசிய செய்திகள்

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஊழியர் குத்திக் கொலை

தினத்தந்தி
|
17 Oct 2022 2:41 AM IST

பெங்களூருவில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு அருகே தலகட்டபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மாருதி (வயது 26). இவர், மோட்டார் சைக்கிள்கள் விற்கும் ஷோரூம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், மாருதிக்கும், தலகட்டபுராவை சேர்ந்த அசோக் என்பவரின் மனைவிக்கும், மாருதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அசோக்குக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் மாருதியை சந்தித்து தனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி அசோக் கூறியுள்ளார். அதன்பிறகும், 2 பேரும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று கூறி, திப்பசந்திராவுக்கு வரும்படி மாருதியை அசோக் அழைத்தார். அங்கு வைத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த அசோக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி மாருதியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மாருதி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்