< Back
தேசிய செய்திகள்
3 சிறுமிகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்; தானும் தற்கொலைக்கு முயன்றார்
தேசிய செய்திகள்

3 சிறுமிகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்; தானும் தற்கொலைக்கு முயன்றார்

தினத்தந்தி
|
26 Aug 2023 3:21 AM IST

3-வதும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தி அடைந்து 3 சிறுமிகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா. இவரது கணவர் அனுமன். இந்த தம்பதிக்கு ஸ்ரீசைல் (5), சரவாணி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சங்கீதா 3-வது முறையாக கர்ப்பமானார். அப்போது அவர் தனக்கு மகன் பிறக்க வேண்டும் என வேண்டி இருந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் மனமுடைந்தார். இந்த நிலையில் சங்கீதா தனது 3 குழந்தைகளுடன் அருகில் உள்ள விளைநிலத்திற்கு சென்றார். பின்னர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து அறிந்ததும் அங்கு வந்த அவரது கணவர், கிணற்றில் குதித்து மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு மேலே கொண்டு வந்தார். எனினும் அவரது 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. சங்கீதா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜமகண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்