கள்ளக்காதலனுடன் சிக்கிய மாமியார்... தகாத உறவை தட்டி கேட்ட மருமகன் கத்தியால் குத்தி கொலை
|தகாத உறவை தட்டிக்கேட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் ஆரோவில் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இவரது வீட்டின் எதிரே உள்ள வீட்டில், மாமியார் கோமதி வசித்து வருகிறார்.
கோமதிக்கும், புதுவையை சேர்ந்த தேவா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. மாமியார் கோமதி வீட்டுக்கு தேவா அடிக்கடி வந்து செல்வதை முகுந்தன் தட்டிக் கேட்டுள்ளார். இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த தேவா மறைத்து வைத்திருந்த கத்தியால், முகுந்தனை குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த வந்த போலீசார், முகுந்தனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், தேவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.