< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரெயிலில் அடிபட்டு குட்டியுடன் தாய் யானை சாவு
|11 Oct 2022 3:51 AM IST
அசாம் மாநிலத்தில் ரெயிலில் அடிபட்டு குட்டியுடன் தாய் யானை உயிரிழந்தது.
கவுகாத்தி,
அசாமின் ஜோர்காட் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக ரெயில் பாதை செல்கிறது. இந்த பகுதியில் ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்த நிலையில் டெல்லி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள காரிகட்டியா ரெயில் நிலையத்துக்கு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது குட்டி யானை ஒன்றும், அதன் தாய் உள்பட மேலும் 2 யானைகளுமாக 3 யானைகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் யானைகள் மீது ரெயில் மோதியது. இதில் குட்டியும், தாய் யானையும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.