< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 குழந்தைகள் உயிரிழப்பு
|11 April 2024 10:35 PM IST
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 ஆண் குழந்தைகள் உயிரிழந்தனர்.
திருச்சூர்,
கேரளா மாநிலம் திருச்சூர் வெள்ளட்டாஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அகில்-சயனா தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர். இதற்கிடையே கடன் தொல்லையால் இருக்கும் வீட்டை விற்பது தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சயானா 3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் 4 பேரையும் வெளியே கொண்டு வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிஜய் (7 வயது) மற்றும் ஆதிதேவ் (6 வயது) ஆகிய இரு ஆண்குழந்தைகளும் உயிரிழந்தனர். தாய் மற்றும் பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.