< Back
தேசிய செய்திகள்
இலவச மின்சார திட்டத்திற்கு இதுவரை 70 லட்சம் பேர் விண்ணப்பம்
தேசிய செய்திகள்

இலவச மின்சார திட்டத்திற்கு இதுவரை 70 லட்சம் பேர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
28 Jun 2023 2:25 AM IST

இலவச மின்சார திட்டத்தில் பயன்பெற வேண்டி இதுவரை 70 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக அரசு கிரகஜோதி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற பொதுமக்கள் சேவா சிந்து இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை 70 லட்சத்து 5 ஆயிரத்து 892 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 2 கோடியே 16 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்