< Back
தேசிய செய்திகள்
புத்தாண்டு தினமான இன்று அயோத்திக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

புத்தாண்டு தினமான இன்று அயோத்திக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
1 Jan 2023 7:51 AM IST

கடந்த புத்தாண்டின்போது 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தியில் குவிந்தனர்.

அயோத்தி,

புத்தாண்டுக்கு அயோத்தியில் லட்சக் கணக்கான மக்கள் கூடுவர். கடந்த புத்தாண்டின்போது 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அயோத்தியில் குவிந்தனர். இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி நேற்று சுமார் 50 லட்சம் பேர் அயோத்தியில் முகாமிட்டனர்.

இதுகுறித்து அயோத்தி மாவட்ட ஆட்சியர் நிதிஷ்குமார் கூறும்போது, ''அயோத்தியில் ஏராளமான கோயில்கள் உள்ளன. புத்தாண்டில் கோயில்களில் சிறப்புவழிபாடுகளை நடத்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது'' என்று தெரிவித்தார்.

பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும் பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்