< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் 8 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கைது - ஆர்.டி.ஐ. தகவல்
தேசிய செய்திகள்

டெல்லியில் 8 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கைது - ஆர்.டி.ஐ. தகவல்

தினத்தந்தி
|
9 May 2023 8:28 PM IST

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசின் பொது பரிவர்த்தனை துறைகளில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தகவல் அறியும் உரிமைச் சட்டம்(ஆர்.டி.ஐ.) மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலின் மூலம், டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2015 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் டெல்லி ஜல் போர்டு, டெல்லி மாநகராட்சி, வருவாய் உள்ளிட்ட பொது பரிவர்த்தனை கொண்ட துறைகளில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்