சட்டசபை தேர்தலில் நாகாலாந்து ஆளுங்கட்சிக்கு அதிக இடங்கள்: பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பாராட்டு
|சட்டசபை தேர்தலில் நாகாலாந்து ஆளுங்கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதற்காக பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பாராட்டு தெரிவித்தார்.
மோன்,
நாகாலந்தில் வருகிற 27-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக மக்களின் கட்சியுடன் (என்.டி.பி.பி.), பா.ஜனதா கூட்டணி அமைத்து களம் காண்கிறது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் என்.டி.பி.பி. கட்சிக்கு 40 இடங்களும், பா.ஜனதாவுக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்காக பா.ஜனதாவை முதல்-மந்திரி பாராட்டினார்.
தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், 'நீங்கள் (பா.ஜனதா) நாகா மக்களை மதித்து கூட்டணியின் பெரிய கட்சியாக அங்கீகரித்து உள்ளீர்கள். பா.ஜனதாவுக்கு திறன் இருந்தும் 20 இடங்களில் போட்டியிடுவதாக பணிவை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நாகா மக்களின் வரலாறு, பண்பாடு, கலாசாரத்தை மதித்து இருக்கிறீர்கள். ஒரு கிறிஸ்தவ மாநிலமாக, எங்கள் மாநிலத்தின் விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது' என பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டார்.