< Back
தேசிய செய்திகள்
பாஜகவின் தவறான ஆட்சிக்கு இதுதான் உதாரணம்: ஓவைசி பாய்ச்சல்
தேசிய செய்திகள்

பாஜகவின் தவறான ஆட்சிக்கு இதுதான் உதாரணம்: ஓவைசி பாய்ச்சல்

தினத்தந்தி
|
3 Nov 2022 4:36 PM IST

குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார்.

ஐதராபத்,

குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார். குஜராத் தொங்கு பாலம் விபத்து குறித்துப் பேசிய ஒவைஸி, 'மோர்பியில் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. இது குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்' என்று கூறினார். மேலும் ஓவைசி கூறுகையில், 'குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சியால், கொரோனா காலத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அங்கு பணவீக்கம் உள்ளது, வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு குரல் கொடுக்கவும் தலைமையை உருவாக்கவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். குஜராத் தேர்தலில் இந்த பிரச்னைகளை நாங்கள் எழுப்புவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்