< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
19 July 2022 11:38 AM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி:

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் கூட்டம் தொடங்கியதுமே விலைவாசி உயர்வு, பணவீக்கம் உயர்வுக்கு எதிராகவும், அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறவும் வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் பிற அலுவல்களை ஒத்திவைத்து உடனடியாக விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால் மாநிலங்கள் அவை ஒத்தி வைக்கப்பட்டது

இதுபோல் மக்களவையிலும் தொடர்ந்து எதிர்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இன்று காலை தொடங்கிய இரு அவைகளும் சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்