< Back
தேசிய செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய  குரங்குகள்
தேசிய செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய குரங்குகள்

தினத்தந்தி
|
23 Sept 2024 1:31 PM IST

சிசிடிவி கேமரா மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள தவுலா கிராமத்தில் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த சிறுமியை மிரட்டி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

அப்பகுதியில் இருந்த சில குரங்குகள் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கடித்து விரட்டியுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி அங்கிருந்து தப்பி தனது பெற்றோரிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி சிறுமியின் பெற்றோர் பாக்பத் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, அந்த கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் குற்றவாளி, சிறுமியை தன்னுடன் அழைத்து செல்வது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்து அந்த நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குரங்குகள் சிறுமியை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி முழுவதும் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

மேலும் செய்திகள்