< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயின் வழக்கு: இடைக்கால ஜாமீனை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|11 July 2023 12:08 AM IST
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ஜெயினுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள 3 மருத்துவமனைகள் பரிந்துரைத்துள்ளதாகவும், இரு மருத்துவமனைகளின் அறிக்கை 8-ம் தேதி கிடைத்ததாகவும் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கைகளை எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்யட்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீ்ம கோர்ட்டு, 3-வது மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இடைக்கால ஜாமீனை நீட்டித்து விசாரணையை வருகிற ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.