நேஷனல் ஹெரால்டு: விசாரணைக்கு நாளை மறுதினமும் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்
|ராகுல் காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையின் இன்றைய விசாரணை 8 மணி நேரத்தை கடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாளை மறுதினம் (ஜூன் 17) விசாரணைக்காக ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.
இதன் மூலம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி 4-வது முறையாக அமலாக்கத்துறையில் ஆஜராக உள்ளார்.