< Back
தேசிய செய்திகள்
பி.எப்.ஐ.க்கு எதிரான பண மோசடி தடுப்பு நடவடிக்கை - மூணாரில் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

பி.எப்.ஐ.க்கு எதிரான பண மோசடி தடுப்பு நடவடிக்கை - மூணாரில் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
6 Aug 2023 8:56 PM IST

மூணாரில் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவனந்தபுரம்,

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த நபர்கள் 'மூணார் வில்லா விஸ்டா பிரைவேட் லிமிபெட்' (எம்.வி.வி.பி.எல்.) என்ற பெயரில் குடியிருப்பு திட்டத்திற்கான நிறுவனத்தை உருவாக்கி பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பண மோசடி தடுப்பு நடவடிக்கையாக மூணாரில் எம்.வி.வி.பி.எல்.-க்கு சொந்தமான 4 வீடுகள், 6.75 ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.2.53 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்