மோடியின் உத்தரவாதம் இந்தியாவுக்கு வெளியேயும் வேலை செய்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
|உக்ரைன், இஸ்ரேல் அல்லது சூடான் நாடுகளில் சவாலான சூழலை எதிர்கொண்டபோது, நம்முடைய மக்களுக்கு இந்திய அரசு ஆதரவளித்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
பிகானீர்,
ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, மத்திய வெளிவிவகார துறை மந்திரியாக எனக்கு தெரிந்தவரையில், நம்முடைய குடிமக்கள் அல்லது நம்முடைய நாட்டினர் எந்த பகுதியிலாவது சிக்கி கொண்டால், மோடியின் உத்தரவாதம் நம்முடைய எல்லைகளை கடந்தும் வேலை செய்கிறது என என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டுக்கு வேலைக்காக அல்லது சுற்றுலாவாசிகளாக அல்லது படிப்புக்காக செல்லும் மாணவர்களாக என நம்முடைய மக்களுக்கு, பிரதமர் மோடியின் இந்தியா மீது, இப்போது உள்ளதுபோல் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்போம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
எந்த இடத்திலாவது ஏதேனும் சிக்கல் தோன்றினால், நாங்கள் அந்த பகுதியில் இருப்போம் என்றும் கூறினார். இதேபோன்று உக்ரைன், இஸ்ரேல் அல்லது சூடான் நாடுகளில் சவாலான சூழலை எதிர்கொண்டபோது, மக்களுக்கு இந்திய அரசு ஆதரவளித்தது. நம்பக தன்மையுடன் செயல்பட்டது என உறுதியுடன் கூறினார்.