< Back
தேசிய செய்திகள்
விலைவாசியை கட்டுப்படுத்த பிரதமர் தவறி விட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த பிரதமர் தவறி விட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
13 Dec 2023 8:10 PM GMT

கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தரவாதம், பணவீக்கத்துக்கான உத்தரவாதம் தான் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில், "இப்போதெல்லாம், பிரதமர் மோடியின் உத்தரவாதங்கள் பற்றி பா.ஜனதா பேசி வருகிறது. அவர்களின் மற்ற உத்தரவாதங்கள் பற்றி தெரியாது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தரவாதம், பணவீக்கத்துக்கான உத்தரவாதம் ஆகும். இந்த அரசின் தவறான கொள்கைகளால், பணவீக்கம் ஏற்கனவே 45 ஆண்டுகால சாதனையை முறியடித்து விட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. உணவு பொருட்களின் விலை உயர்வால், சில்லறை பணவீக்கம் 5.5 சதவீதமாக உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி முற்றிலும் தவறி விட்டார். இந்த தோல்வியை மறைக்கவே அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்