< Back
தேசிய செய்திகள்
சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

தினத்தந்தி
|
9 Dec 2023 12:29 PM IST

சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சோனியா காந்தி நீண்டகாலம் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்