< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'பிரதமர் மோடி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சிக்கு வருவார்' - ராஜ்நாத் சிங் நம்பிக்கை
|29 Oct 2023 3:45 AM IST
நாட்டு மக்களின் மொத்த நம்பிக்கையாக பிரதமர் மோடி உள்ளார் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லக்னோ,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தனது நாடாளுமன்ற தொகுதியான உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவிற்கு 2 நாட்கள் பயணமாக வருகை தந்தார். அங்கு வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், "நாட்டு மக்களின் மொத்த நம்பிக்கையாக பிரதமர் மோடி உள்ளார். அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 3-வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார். நான் மட்டுமல்ல, பல அரசியல் பார்வையாளர்களும் இதையே கூறி வருகின்றனர்" என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.