< Back
தேசிய செய்திகள்
Modi Inauguration Woman Loco Pilot Invited

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

மோடி பதவியேற்பு விழா: ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு

தினத்தந்தி
|
7 Jun 2024 6:53 PM IST

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் வரும் 9-ந்தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த சுரேகா யாதவ், கடந்த 1988-ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக தனது பணியை தொடங்கினார்.

இவரது சாதனைகளுக்காக பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றுள்ளார். தற்போது இவர் மராட்டிய மாநிலம் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் மற்றும் சோலாபூர் இடையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்