பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையை கடைபிடித்து வருகிறது - மத்திய உள்துறை அமைச்சகம்
|மோடி அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையை கடைபிடித்து வருகிறது.
புதுடெல்லி,
'பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக் கூடாது' என்ற கருப்பொருளில் 3வது அமைச்சர்களின் மாநாட்டை நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறது.
மோடி அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையை கடைபிடித்து வருகிறது. இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் உறுதியை சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் தெரிவிக்கும்.
இந்த மாநாட்டை நடத்துவது சர்வதேச பயங்கரவாதத்திற்கு மோடி அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தையும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையையும் பிரதிபலிக்கிறது என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச பயங்கரவாத பிரச்சனை குறித்து மத்திய அரசின் முன்னெடுப்புகளின் முக்கியத்துவத்தையும், இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கைகள் பற்றியும், சர்வதேச அரங்கில் பேச்சு வார்த்தைகளை நடத்துவதுமே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார்.பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக தொழில்நுட்பம், சட்டம், ஒழுங்குமுறை மற்றும் அனைத்து ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றியும் விவாதிக்கபடும்.இந்த மாநாட்டில் 75 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.