மல்யுத்த வீரர்களின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு - ராகுல்காந்தி
|மல்யுத்த வீரர்களின் நிலைக்கு மோடி அரசே பொறுப்பு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் தெரிவித்து அவரை கைது செய்யக்கோரி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள், கடந்த செவ்வாய்க்கிழமை தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று அறிவித்து போராடினர். இதையடுத்து அவர்களின் போராட்டம் முடக்கப்பட்டது.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு விவசாயிகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இதுகுறித்து தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது:
"இந்திய மகள்கள் நீதி கேட்டு கதறி அழுகின்றனர் "
"இந்தியாவுக்கு 25 சர்வதேச பதக்கங்களைக் கொண்டு வந்த 5 மகள்கள் நீதி கேட்டு தெருவில் கதறி அழுகின்றனர்"
"15 கொடூரமான பாலியல் குற்றச்சாட்டுகளுடன் எம்.பி., பிரிஜ் பூஷன் பிரதமரரின் பாதுகாப்பில் உள்ளார்"
இந்திய மகள்களின் இந்த நிலைக்கு பாஜக அரசே காரணம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.