< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவகாரம் - சம்மனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவகாரம் - சம்மனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
14 Sept 2023 7:39 PM IST

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய கோர்ட்டு மறுத்துள்ளது.

ஆமதாபாத்,

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில் குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.சஞ்சய் சிங்குக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய ஆமதாபாத் அமர்வு கோர்ட்டு மறுத்து விட்டது.

இதுதொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கை விசாரித்த ஆமதாபாத் பெருநகர நீதித்துறை நடுவர் கோர்ட்டு, சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை ஆமாதபாத் அமர்வு கோர்ட்டு நீதிபதி ஜே.எம். பிரஹம்பட் விசாரித்தார். சம்மன் அனுப்பிய ஆமாதபாத் கோர்ட்டின் உத்தரவு தவறு, இந்த விவகாரத்தில் அவதூறு வழக்கை குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்திருக்கக் கூடாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆமாதபாத் அமர்வு கோர்ட்டு நீதிபதி ஜே.எம். பிரஹம்பட் பிறப்பித்த உத்தரவில், பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரத்தில் குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு வழங்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்