< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
போர்ச்சுகல் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து
|3 April 2024 12:27 PM IST
போர்ச்சுகல் புதிய பிரதமரான லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
போர்ச்சுகல் நாட்டின் புதிய பிரதமராக லூயிஸ் மாண்டினீக்ரோ நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிய பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "போர்ச்சுகல் குடியரசின் பிரதமராக பதவியேற்ற லூயிஸ் மாண்டினீக்ரோவுக்கு அன்பான வாழ்த்துகள். நமது நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.