< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

குழந்தைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி..!

தினத்தந்தி
|
11 Aug 2022 1:27 PM IST

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார்.

புதுடெல்லி,

ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ரக்‌ஷா பந்தன் ஒன்று ஆகும்.

சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் வெளிப்படுத்தும் ரக்‏ஷா பந்தன் பண்டிகை திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பெண் குழந்தைகளுடன் பிரதமர் மோடி ரக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினார்.

பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், தோட்டக்காரர்கள்,டிரைவர்கள் மற்றும் பிற பணியாளர்களின் குழந்தைகள் பிரதமர் மோடியின் கையில் ராக்கி கயிறுகளை கட்டினர்.

இது தொடர்பாக வீடியோவை பிரதமர் அலுவலகம் வெளியீட்டுள்ளது.


மேலும் செய்திகள்