இந்தியாவை உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக மாற்றியவர் பிரதமர் மோடி- அமித் ஷா பாராட்டு
|மோடி பிரதமரான பிறகு இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டு வந்ததாக அமித் ஷா பேசினார்.
அகமதாபாத்,
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அந்த வகையில் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அருகே மேம்பாலம் மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தை இன்று திறந்து வைத்தார். மேலும் குஜராத்தின் சனந்தில் ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் கழகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைக்கு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து நடந்த பேரணியில் பேசிய அமித் ஷா, சுகாதார சேவைகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற பிரதமர் மோடி முழுமையான அணுகுமுறையுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
இந்த பேரணியில் மேலும் பேசிய அமித் ஷா கூறுகையில், "இந்தியா உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. காங்கிரஸ் அதை 12வது இடத்திற்கு தள்ளியது. அதை மீண்டும் 11வது இடத்திற்கு உயர்த்தியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். நரேந்திர மோடி பிரதமரான பிறகு இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டு வந்தார்" என்றார்.