< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தார்வார்-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை தொடங்கிவைத்த பிரதமர் மோடியை ஓவியமாக வரைந்த கலைஞர்
|28 Jun 2023 2:35 AM IST
தார்வார்-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயிலை தொடங்கிவைத்த பிரதமர் மோடியை ஓவியமாக வரைந்த கலைஞருக்கு பாராட்டுகள் குவிகிறது.
தார்வார்:
மத்தியபிரதேச மாநிலம் போபால் ரெயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தார்வார்-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கிவைத்தார். இதை சிறப்பிக்கும் வகையில் தார்வாரை சேர்ந்த பிரபல ஓவிய கலைஞர் மஞ்சுநாத் ஹிரேமத், வந்தேபாரத் ரெயிலை தொடங்கிவைத்த பிரதமர் மோடி மாதிரி படத்தை தத்ரூபமாக வடிவமைத்தார்.
அதாவது பிரதமர் மோடி பச்சைக்கொடியுடன், தார்வார்-பெங்களூரு இடையேயான வந்தேபாரத் ரெயிலை தொடங்கிவைப்பது போன்று வடிவமைத்து இருந்தார். இந்த ஓவியம் தொடர்பான புகைப்படங்கள் நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதற்காக ஓவியர் மஞ்சுநாத் ஹிரேமத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.