< Back
தேசிய செய்திகள்
அந்தமானில் 5.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

அந்தமானில் 5.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

தினத்தந்தி
|
29 July 2023 3:04 PM IST

அந்தமானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

போர்ட்பிளேர்,

அந்தமான்-நிகோபரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் போர்ட்பிளேரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் நள்ளிரவு 12.53 மணிக்கு ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின்போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்