< Back
தேசிய செய்திகள்
காதல் விவகாரம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேரன் விஷம் குடித்து தற்கொலை
தேசிய செய்திகள்

காதல் விவகாரம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேரன் விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
21 May 2024 1:12 PM IST

பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் பேரன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் கில்ஜிபூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹஜாரி லால் டங்கி. இவரது பேரன் விகாஷ் டங்கி. 21 வயதான விகாஷ் இந்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் பயின்று வருகிறார். அவர் இந்தூரில் தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி கல்லூரி சென்றுவருகிறார்.

இந்நிலையில், விகாஷ் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர், அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், நீண்ட நேரம் செல்போனில் தொடர்புகொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த நண்பர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக விரைந்து வந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு விகாஷ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விகாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் விகாஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்