< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிசோரமில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
|18 Jan 2023 8:26 PM IST
மிசோரமில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்வால்,
கிழக்கு அசாம் ரைபிள்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தலைமையில் 23 செக்டர் அசாம் ரைபிள்ஸ் ஐஸ்வால் பட்டாலியன் ரூ.2.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் அடங்கிய 40 சோப்பு டப்பாக்களைபறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக, 3 பேரை கைது செய்துள்ளனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், ஐஸ்வால் பட்டாலியன் குழு, ஐஸ்வால் கலால் மற்றும் போதைப்பொருள் துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு சுமார் ரூ.2,51,50,000 ஆகும்.
தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் கலால் மற்றும் போதைப்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.