< Back
தேசிய செய்திகள்
ஏவுகணை முதல் இசை வரை பல துறைகளில் பெண்கள் சாதனை - ஜனாதிபதி பெருமிதம்
தேசிய செய்திகள்

ஏவுகணை முதல் இசை வரை பல துறைகளில் பெண்கள் சாதனை - ஜனாதிபதி பெருமிதம்

தினத்தந்தி
|
22 Aug 2023 4:20 AM IST

ஏவுகணை முதல் இசை வரை பல துறைகளில் பெண்கள் சாதனை நிகழ்த்தி இருப்பதாக ஜனாதிபதி பெருமிதத்துடன் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் மானக்ஷா மையத்தில், ராணுவ அதிகாரிகளின் மனைவிமார்கள் நல சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது:-

நாட்டுக்கு பங்காற்றிய அனைத்து வீரப்பெண்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பழைய பழமொழி இருக்கிறது. 'ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்' என்று. அதை இன்று 'ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு அருகிலும் ஒரு பெண் இருக்கிறாள்' என்று சொல்ல வேண்டும்.

தடைகளை முறியடித்து சாதனை

சமுதாய முன்னேற்றத்துக்கும், தேசத்தின் முன்னேற்றத்துக்கும் பெண்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. பெண் சக்தியை போற்றுவோம்.

ஏவுகணை முதல் இசை வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் மாபெரும் உயரத்தை எட்டி உள்ளனர். அனைத்து தடைகளையும் சந்தித்து, முறியடித்து சாதனை செய்துள்ளனர் என்று அவர் பேசினார்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்