< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் ஒவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீச்சு
தேசிய செய்திகள்

டெல்லியில் ஒவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீச்சு

தினத்தந்தி
|
21 Feb 2023 12:46 AM IST

டெல்லியில் ஒவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

புதுடெல்லி,

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசிக்கு டெல்லி அசோகா சாலையில் வீடு உள்ளது. நேற்று அந்த வீடு மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக டெல்லி போலீசில் ஒவைசி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு 4-வது தடவையாக, தன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலில் ஜன்னல் கண்ணாடி உடைந்து விட்டதாகவும் ஒவைசி கூறியுள்ளார். உயர் பாதுகாப்பு பகுதியிலேயே தாக்குதல் நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்