< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தனி நபரையோ, சமூகத்தையோ மதத்தில் இருந்து நீக்க வக்பு வாரியத்திற்கு உரிமை இல்லை - மத்திய மந்திரி
|26 July 2023 3:30 PM IST
தனி நபரையோ, சமூகத்தையோ மதத்தில் இருந்து நீக்க வக்பு வாரியத்திற்கு உரிமை இல்லை என மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி தெரிவித்தார்.
டெல்லி,
நாட்டில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்கள், சொத்துக்களை அந்தந்த மாநிலத்தில் உள்ள வக்பு வாரியங்கள் பராமரித்து வருகின்றன. இஸ்லாமிய மதத்தில் ஷியா, சன்னி, அகமதியா என பல உட்பிரிவுகள் உள்ளன.
இதனிடையே, அகமதியா சமூகத்தினர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று ஆந்திர பிரதேச வக்பு வாரியம் தீர்மானம் நிறைவேற்றியது. அகமதியா சமூகத்தினரை இஸ்லாமிய மதத்தினர் கிடையாது எனவும் அறிவித்தது.
இந்நிலையில், தனி நபரையோ, சமூகத்தையோ மதத்தில் இருந்து நீக்க வக்பு வாரியத்திற்கு உரிமை இல்லை என மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.