< Back
தேசிய செய்திகள்
6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - பள்ளி ஊழியர் கைது

கோப்புப்படம்





































































தேசிய செய்திகள்

6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - பள்ளி ஊழியர் கைது

தினத்தந்தி
|
30 April 2023 5:34 AM IST

வடகிழக்கு டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆய்வக உதவியாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லியில் யமுனா விகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு மாணவி 6-ம் வகுப்பு படித்துவருகிறார். அந்தப் பள்ளியில் ராஜீவ் (வயது 37) என்பவர் ஆய்வக உதவியாளராக வேலை பார்க்கிறார்.

அவர் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவி நேற்று முன்தினம் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதையடுத்து அவர்களின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த நபர் 5 ஆண்டுகளாக அப்பள்ளியில் வேலைபார்த்து வருவதாகவும், 'போக்சோ' சட்டத்தின்கீழ் அவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்