< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை; 50 வயது உறவினர் கைது
|1 Oct 2024 9:48 PM IST
அசாமில் மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் உறவினரான 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்பூர்,
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் இந்தியா-வங்காளதேச எல்லை அருகே கட்டிகோரா என்ற பகுதியில், ஒரு மைனர் சிறுமி(வயது 12) தனது வீட்டின் குளியலறைக்கு சென்றபோது, அந்த சிறுமியின் உறவினரான 50 வயது நபர் ஒருவர், சிறுமியை அருகில் இருக்கும் வயல் பகுதிக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமி கிழிந்த ஆடைகளுடன் வயல் பகுதியில் இருந்து வீட்டை நோக்கி ஓடி வருவதைக் கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சிறுமி மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த சிறுமியின் உறவினரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.