குழந்தைகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் இல்லை- ரெயில்வே அமைச்சகம்
|டிக்கெட்களை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
புதுடெல்லி,
குழந்தைகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம் இல்லை என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்று முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் பரவியது. இதையடுத்து ரெயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் மார்ச் 6, 2020 தேதியிட்ட சுற்றறிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு ஒரு தனி பெர்த் அல்லது இருக்கை வழங்கப்படாது. இருப்பினும் 5 வயதுக்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு ஒரு தனி பெர்த் அல்லது இருக்கை வேண்டும் என்றால் அதற்காக முழுத்தொகையை செலுத்த வேண்டும்.
இந்த விதிகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தற்போது போல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.