சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு
|சிங்கப்பூர் நாட்டிற்கு அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து இருப்பதால், பாஸ்மதி அல்லாத பிற வகை வெள்ளை அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டுற்கு இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே உள்ள மிக நெருக்கமான மூலோபாய கூட்டாண்மை, பகிரப்பட்ட நலன்கள், பொருளாதார உறவுகள் மற்றும் வலுவான மக்கள் தொடர்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சிங்கப்பூரின் உணவு பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முறையான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
Our response to media queries on export of rice to Singapore:https://t.co/RfmpXV38jR pic.twitter.com/lzqbRlzesb
— Arindam Bagchi (@MEAIndia) August 29, 2023 ">Also Read: