கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மந்திரி ஷோபா கரந்தலாஜே ஆய்வு
|உடுப்பி அருகே, கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மந்திரி ஷோபா கரந்தலாஜே நேரில் ஆய்வு செய்தார்.
மங்களூரு;
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்பட பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பலபகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
காவிரி, நேத்ராவதி, துங்கா உள்பட பல ஆறுகளில் வெள்ளம் கரைதொட்டு ஓடுகிறது. இந்த கனமழைக்கு 13 பேர் இறந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட கால்நடைகள் செத்தன. இந்த நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவர் உடுப்பி அருகே காபு பகுதிகளில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:-
மண் அரிப்பால்
ஆண்டுதோறும் கனமழை காரணமாக காபு உள்பட கடலோர பகுதிகளில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் அரிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண் அரிப்பால் சேதமடைந்துள்ளது.
30-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடல் அரிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் சுவர் எழுப்பினால் மட்டுமே இதற்கு தீர்வு காணப்படும் என பொதுமக்கள் கூறுகின்றனர். அதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.