< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி கங்கை அம்மன் கோவிலில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து மந்திரி ரோஜா தரிசனம்
|14 May 2023 11:07 PM IST
ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா, கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார்.
திருப்பதி,
திருப்பதி கங்கை அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா, கங்கை அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தார். இதற்காக ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோர் பட்டு வஸ்திரம், பூஜை பொருட்கள் ஆகியவற்றை தங்கள் தலையில் சுமந்தபடி வந்து கோவிலில் சமர்ப்பித்துவிட்டு கங்கை அம்மனை வழிபாடு செய்தனர்.