< Back
தேசிய செய்திகள்
சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க சதித்திட்டம் தீட்டும் ரமேஷ்குமார்
தேசிய செய்திகள்

சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க சதித்திட்டம் தீட்டும் ரமேஷ்குமார்

தினத்தந்தி
|
23 July 2022 1:53 AM IST

சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சதித்திட்டம் தீட்டுவதாக மந்திரி முனிரத்னா கூறினார்.

கோலார் தங்கவயல்:

சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சதித்திட்டம் தீட்டுவதாக மந்திரி முனிரத்னா கூறினார்.

சித்தராமையா உணர வேண்டும்

கோலார் டவுனில் நேற்று பா.ஜனதா ஆட்சி சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மந்திரி முனிரத்னா கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலார் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரசார் சித்தராமையாவை கோலார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

அதில் குறிப்பிடும்படியாக முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரும் அடங்குவார். சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ரமேஷ் குமார் செயல்பட்டு வருவது சித்தராமையாவுக்கு தெரியாது. கோலார் சட்டசபை தொகுதியில் சித்தராமையாவை அரசியலில் இருந்து ஓரம் கட்ட ரமேஷ்குமார் உள்ளிட்டோர் சதி செய்து வருகின்றனர். இதை சித்தராமையா நன்கு உணரவேண்டும்.

அரசியல் வாழ்க்கையை ஒழிக்க சதி

கோலார் டவுன் எம்.எல்.ஏ. சீனிவாசகவுடா தனது தொகுதியில் ஆணி வேராக விளங்குகிறார். அவரைத் தவிர அந்த தொகுதியில் வேறு யார் போட்டியிட்டாலும் தோற்று விடுவார்கள். ஆனால் சீனிவாசகவுடா தனது தொகுதியை சித்தராமையாவுக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இவ்வாறாக நாடகத்தை அரங்கேற்றி ரமேஷ்குமாரும், சீனிவாசகவுடாவும் சேர்ந்து சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். சித்தராமையா உணரவேணடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்