மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு
|மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார்.
புதுடெல்லி,
மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் எழுந்துவருகிறது.
இந்த சூழலில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது, காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் பேச உள்ளார்.
மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழகத்திற்கு உடனடியாக பெற்றுத்தர மத்திய மந்திரியிடம் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பான அறிவிப்பை இன்று கால 10 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகா போதுமான அளவு இன்னும் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.